www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs November 18, 2017 (18/11/2017)
தலைப்பு : பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள், பொது விழிப்புணர்வு
எரிநெய் மற்றும் பெட்ரோலிய கற்கரி
அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் உச்ச நீதிமன்றம் ஆனது, மாசுபாட்டை எதிர்த்து போராடும் முயற்சியில் எரிநெய் மற்றும் பெட்ரோலிய கற்கரி ஆகியவற்றை முழுவதுமாக பயன்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தியுள்ளது.
இதன் பின்னணி:
அக்டோபர் 24 ஆம் தேதி முதல் ஏற்கனவே உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் எரிநெய் மற்றும் பெட்ரோலிய கற்கரி பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டின் சுற்றுச்சூழல் பெஞ்ச் ஏற்கனவே தடை விதித்தது.
எதனால் தடை தேவை:
ஆட்டோமொபைல் எரிபொருள் – பெட்ரோல் மற்றும் டீசல் – அதிக ஆபத்தான கந்தகத்தின் ஒரு பகுதிக்கு 50 பாகம் (PPM) உள்ளது.
_
தலைப்பு : இந்தியாவின் கலாச்சார திருவிழாக்கள், வரலாற்று நிகழ்வுகள்
ஆதி மஹோத்சவ்
இது டெல்லியில் நடைபெறும் இருவாரகால நீண்ட பழங்குடி திருவிழா ஆகும்.
இதன் கருப்பொருள் : ‘பழங்குடி மக்களின் கலாச்சாரம், சமையற்கலை மற்றும் வர்த்தகத்தின் சிறப்பினை கொண்டாடும் கொண்டாட்டம்’ ஆகும்.
இதன் சிறப்பம்சங்கள்:
25 மாநிலங்களில் இருந்து 750 க்கும் மேற்பட்ட பழங்குடி கலைஞர்களும் கைவினைஞர்களும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்த கொண்டாட்ட திருவிழாவானது பழங்குடி மக்களின் கைவினைப்பொருட்கள், கலை, ஓவியங்கள், துணி, நகை மற்றும் பல ஆகியவற்றினை கண்டுகளிக்கவும் விற்பனை செய்யவும் வழிவகுக்கும் மிகப்பெரும் மையமாக இத்திருவிழா உதவுகிறது.
_
தலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகளில் நபர்கள்
சிபி ஜார்ஜ் – முடியாட்சி நாடு லீக்கின்ஸ்டைன்–ன் இந்தியாவின் அடுத்த தூதர்
சிபி ஜார்ஜ் முடியாட்சி நாடு லீக்கின்ஸ்டைன்-னிற்கு இந்தியாவின் அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லீக்கின்ஸ்டைன் (Liechtenstein) என்பது நடு ஐரோப்பாவில் உள்ள இடாய்ச்சு மொழி பேசும் ஒரு சிறிய நிலம்சூழ் நாடு ஆகும்.
சிபி ஜார்ஜ் 1993 பேட்ச்-ன் இந்திய வெளிநாட்டு சேவை அதிகாரி (IFS) ஆவார். தற்போது சுவிட்சர்லாந்திற்கு அவர் இந்திய தூதராக உள்ளார்.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
17 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகியாக இந்தியாவின் மனுஷி சில்லர் தேர்வு
அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர், இந்த ஆண்டு ‘மிஸ் இந்தியா’ அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், சீனாவின் சானியா நகரில் நடந்த, 2017ம் ஆண்டிற்கான உலக அழகிப்போட்டியில் மனுஷி சில்லர் உலக அழகி பட்டத்தை வென்றார்.
இதில் உலகம் முழுவதும் இருந்து 118 பேர் பங்கேற்றனர்.
2000மாவது ஆண்டிற்கு பின் 17 ஆண்டுகளுக்கு பின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.
உலக அழகி பட்டம் வெல்லும் 6வது இந்திய பெண் மனுஷி சில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.