Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs November 09, 2017

TNPSC Tamil Current Affairs November

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs November 09, 2017 (09/11/2017)

 

Download as PDF

தலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்

தேசிய பூப்பந்து போட்டி 2017

82 வது சீனியர் தேசிய பூப்பந்து சாம்பியன்ஷிப் ஆனது 2017 நவம்பர் 8 ம் தேதி மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் H.S பிரனாய் அவர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த் அவர்களை தோற்கடித்து பட்டத்தினை வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் No 2 தரவரிசையிலுள்ள பி.வி. சிந்து வீராங்கனையை சாய்னா நெஹ்வால் தோற்கடித்து பட்டத்தினை வெற்றி பெற்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்வி சாய் R (Satwik Sai Raj R), அஸ்வினி பொன்னப்பா (Ashwini Ponnappa) ஜோடிகள் பிரணவ் ஜெர்ரி சோப்ரா (Pranaav Jerry Chopra), N சிக்கி ரெட்டி (N Sikki Reddy) ஜோடியை தோற்கடித்து பட்டத்தினை வென்றனர்.

_

தலைப்பு : புதிய நாட்குறிப்பு நிகழ்வுகள், பொது நிர்வாகம்

கிரேட்டர் நொய்டாவில் மூன்று நாள் கரிம உலக காங்கிரஸ் – 2017

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகளின் நலத்துறை மந்திரி ராதா மோகன் சிங் அவர்கள், கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மையத்தில் மூன்று நாள் கரிம உலக காங்கிரஸ் – 2017-னை துவக்கி வைத்தார்.

ஆர்கானிக் வேர்ல்டு காங்கிரஸ் (OWC) ஆனது கரிம உலக காங்கிரஸினை ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒரு முறை வெவ்வேறு நாட்டில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

கரிம வேளாண்மை இயக்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு (IFOAM) மற்றும் இந்தியாவின் கரிம வேளாண்மை சங்கம் (OFAI) இரண்டும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.

_

தலைப்பு: புதிய நாட்குறிப்பு நிகழ்வுகள், பொது நிர்வாகம்

தீவுகள் மேம்பாட்டு நிறுவனம்

தீவுகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டாவது மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது.

இந்தியாவின் 9 தீவுகளிலும் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு இம்மாநாடு நடத்தப்பட்டது.

அந்தமானின் நான்கு தீவுகளும் (ஸ்மித், ராஸ், லாங், அவிஸ்) லட்சத்தீவுகளிலுள்ள மினிக்காய், பங்காரம், தின்னகரா, செரியம், சுகேலி ஆகிய ஐந்து தீவுகளும் அடங்கும்.

இந்த திட்டத்தில் விருத்தியடையும் கடல்சார் பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக நிலையான அணுகுமுறையின் அடிப்படையில் வளர்ச்சியை ஊக்குவித்து நிறைவேற்றிட இந்நிறுவனம் திட்டமிடுகிறது.

தீவுகள் மேம்பாட்டு நிறுவனம் பற்றி:

தீவுகளின் வளர்ச்சிக்கு நடத்தப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் மறு ஆய்வு கூட்டத்தில், இந்த ஆண்டு ஜூன் 1 ம் தேதி IDA அமைக்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் கூட்டங்கள் மத்திய உள்துறை மந்திரி தலைமையிலானது.

உறுப்பினர்கள்:

இந்த அமைப்பின் உறுப்பினர்களில், அமைச்சரவை செயலாளர், உள்த்துறை செயலாளர், சுற்றுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் செயலாளர், சுற்றுலாத்துறையின் செயலாளர், பழங்குடியினர் நலத்துறையின் செயலாளர் ஆகியோர் உள்ளடங்குவர்.

Exit mobile version